கடலூரில் காதல் திருமணம் செய்து கொண்ட வீராங்கனைக்கு நேர்ந்த கதி !

0
கடலூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தடகள வீராங்களை மர்மமாக உயிரிழந் துள்ளது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடகள வீராங்கனை யான இந்துமதி - வீரக்குமார் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக இந்துமதியிடம் 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார் வீரக்குமார். 

இது தொடர்பாக கணவன் மனைவிக் கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்துமதியின் தாய் ஜெய பாரதியிடம் உங்கள் மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது 


உடனே வாருங்கள் என்று வீரக்குமார் அழைத்துள்ளார். அங்கு சென்று பார்த்த தாய், தனது மகள் இந்துமதி பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதுள்ளார்.

அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வீரக்குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இந்துமதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜெயபாரதி நெல்லிக் குப்பம் பொலிசில் புகார் அளித்துள்ளார்,

இந்து மதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமை யால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? 

அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings