கலைஞரை அடக்கம் செய்யும் சந்தனப் பேழை - எழுதப்பட்ட வாசகம் !

0
கருணாநிதி உடலை வைக்ககூடிய சந்தனப் பேழையில் அவர் விரும்பிய வாசகம் பொறிக்கப் பட்டுள்ளது. 
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக் கொண்டுள்ளான் என்று அதில் எழுதப் பட்டுள்ளது. 

கருணாநிதி அதிகாலை 4.30 மணிக்கே தனது அன்றாட அலுவல்களை ஆரம்பித்துவிட கூடியவர். 

எனவே ஓய்வறியாச் சூரியன் என்று திமுகவினர் கருணாநிதி புகழ் பற்றி எடுத்துரைப்பது உண்டு. 


இந்த நிலையில் தான், ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக் கொண்டுள்ளான் என்ற வாசகம் பொறிக்கப் பட்டுள்ளது. 

ஸ்டாலின் தனது கைப்பட எழுதிய கண்ணீர் அஞ்சலி மடல் ஒன்றை நேற்று ட்விட்டரில் வெளியிட்டார். 

அதில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக் கொண்டுள்ளான் என்று 

உங்கள் நினைவிடத்தில் எழுத வேண்டு மென்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள் என்று குறிப்பிட்டி ருந்தார் ஸ்டாலின். 
கருணாநிதி ஆசைப்படி சந்தனப் பேழையில் இந்த வசனம் எழுதப் பட்டுள்ளது. 

எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது என்று அண்ணா நல்லடக்கம் செய்யப்பட்ட போது வாசகம் பொரிக்கப் பட்டது நினை விருக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings