அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று
இது தொடர்பான வழக்கை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கறிஞர் துரைசாமி கூறியுள்ளார்.
ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு மெரீனா கடற்கரையில் சமாதி அமைக்கப் பட்டது சட்ட விரோதமான செயல்.
எனவே சமாதியை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி,
வழக்கறிஞர் துரைசாமி உள்ளிட்டோர் பலர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தனித்தனி யாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை காரணம் காட்டித் தான் தற்போது கருணாநிதிக்கு இடம் தர தமிழக அரசு மறுத்துள்ளது.
இதனால் திமுகவினர் கொதிப்படைந் துள்ளனர். மெரீனாவில் நினைவிடம் அல்லது சமாதி அமைக்க உயர் நீதிமன்றம் தடை
ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு அதிர்ச்சி தருவதாக சட்ட நிபுணர்களும் கூறி யுள்ளனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த வர்களில் ஒருவரான வழக்கறிஞர் துரைசாமி சன் செய்திக்கு
அளித்த பேட்டியில், நான் தொடர்ந்துள்ள வழக்கு ஜெயலலிதா சமாதியை எதிர்த்து தான்.
அது கடற்கரை ஒழுங்குமுறை விதிகளுக்குப் புறம்பாக அமைக்கப் பட்டுள்ளது.
அதேசமயம், அண்ணா நினைவிட மானது, கூவம் நதிக்கரையில் தான் அமைந்துள்ளது. அது கடற்கரை ஒழுங்கு முறை விதிக்கு உட்படாது.
எனவே அங்கு கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை, சட்டப் பிரச்சினையும் இல்லை.
ஜெயலலிதா சமாதிதான் சட்டத்திற்கு புறம்பான முறையில் அமைக்கப் பட்டுள்ளது.
கருணாநிதி உடல் அடக்கத்திற் காக எனது வழக்கை வாபஸ் பெறவும் கூட நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் துரைசாமி.
Thanks for Your Comments