திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கள்ளக் காதல் விவகாரத்தில்
ஒரு பெண்ணை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் தலைமறை வாக இருந்து வருகிறார்.
இந்த வழக்கை போலீஸார் அனுகிய விதமும் தேஸ்கோவின் பின்னணியும் உள்ளூர் பத்திரிகை யாளர்களே மிரளும் படியாக உள்ளது.
அந்த விசிக பிரமுகர் யார்? அவரது பின்னணி என்ன? என்று விசாரித்தால் திடுக்கிட வைக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள கண்ணியம் நகரைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி என்கிற தேஸ்கோ.
பள்ளிப் படிப்பு மட்டுமே படித்த இவர் 15 ஆண்டுகளு க்கு முன்பு சிவில் சப்ளை லாரிகளில் தினக் கூலியாக மூட்டை தூக்கிக் கொண்டிருந்தவர்.
திடீரென சாராய வியாபாரத்தில் இறங்கிய தேஸ்கோ குறுகிய காலத்திலேயே செய்யாறு
சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கள்ளச் சாராய வியாபாரி களுக்கு மொத்த விநியோகஸ்தராக மாறினார்.
தேஸ்கோ அவருடைய தம்பி பாலாஜியின் துணையுடன் சாராய வியாபாரத்தை பெரிய அளவில் விரிவு படுத்தினார்.
கண்ணியம் நகரில் வேலை யில்லாமல் இருந்த இளைஞர்களை பயன்படுத்திக் கொண்டு ஆட்களையும் சேர்த்துக் கொண்டார்.
விரைவிலேயே தேஸ்கோ சாராய வியாபாரத்தின் மூலம் பல கோடிகளை சம்பாதித்தார். போலீஸ் காரர்களிடம் 'தாராளமாக' இருந்து நெருக்கமாக்கிக் கொண்டார்.
அவ்வப்போது, காவல்துறை அவர் மீது போட்ட வழக்குகளி லிருந்து தனது பண பலத்தால் விடுபட்டு வந்தார்.
சில நேரங்களில் போலீஸாரிட மிருந்து நெருக்கடிகள் வந்த போது சாராய வியாபாரி தேஸ்கோவுக்கு ஒரு அரசியல் பாதுகாப்பு தேவைப்பட்டது.
இந்நிலையில் தான், தேஸ்கோ தனது பாதுகாப்புக்காக சில ஆண்டு களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார்.
தெஸ்கோவுக்கு அரசியல்வாதி என்ற புதிய அடையாளம் மேலும் பலத்தைக் கொடுத்தது.
கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யாறு நகர செயலாளராக பொறுப்பளிக்கப் பட்டது.
கட்சி நிகழ்ச்சி களுக்கு தாராளமாக செலவு செய்வார். கூட்டத்தை கூட்டுவார். அதே நேரத்தில், தேஸ்கோவின் அராஜகங்களும் அதிகரித்தன.
தேஸ்கோ மீது சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போலீஸ் எஸ்ஐயை தாக்கியதற் காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாராய வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன. செய்யாறு கன்னியம் நகரில் சாராய பதுக்கலை
போலீஸுக்கு காட்டிக் கொடுத்த ஒருவரை கொலை செய்ததில் இவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதுவரை தேஸ்கோ 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தாலும் தனது பண பலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் விரைவிலேயே வெளியே வந்து விடுவார்.
டாஸ்மாக் மதுபான கடைகள் பரவலானதாலும், தேஸ்கோவின் அரசியல் பிரவேசத்தா லும் சாராய வியாபாரத்தை விட்டு விட்டு 8 லாரிகளை வாங்கி லாரி தொழிலில் ஈடுபட்டார்.
தேஸ்கோ தன்னை சாராய வியாபாரி தொழிலில் இருந்து மணல் கொள்ளை தொழிலுக்கு மாற்றிக் கொண்டார்.
செய்யாறில் இதில் கட்சி பிரமுகர்கள் ஒன்று பட்டு தான் செயல் படுகிறார்களாம்.
இப்படியான பின்னணி கொண்ட தேஸ்கோவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆனாலும், இவருக்கு அதே செய்யாறைச் சேர்ந்த சுந்தரி (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்பவருடன் கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது.
சுந்தரியின் அத்தியாவசிய செலவு முதல் ஆடம்பர செலவுகள் வரை எல்லா வற்றையும் தேஸ்கோவே கவனித்து வந்துள்ளார்.
இப்படி இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக இந்த தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தேஸ்கோவின் நடவடிக்கை மீது அதிருப்தி கொண்ட சுந்தரி தேஸ்கோவை தவிர்த்து விட்டு வேறு ஒருவருடன் உறவில் இருந்துள்ளார்.
இதை அறிந்த தேஸ்கோ சுந்தரியைக் கண்டித்துள்ளார்.
அதன் பிறகும் சுந்தரி அந்த உறவைத் தொடர்ந்ததால் ஆத்திரம் அடைந்த தேஸ்கோ இரண்டு வாரங்களுக்கு முன்பு,
சுந்தரி காரில் ஆற்காடு சென்று கொண்டிருந்த போது, அடியாட்களுடன் சென்ற தேஸ்கோ
செய்யாறு அருகே பாப்பந்தாங்கல் என்ற இடத்தில் காரை வழிமறித்து சுந்தரியை கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாய மடைந்த சுந்தரி மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
பட்டப் பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், தேஸ்கோ மீது கொலை முயற்சி
வழக்கு போடுவதற்கு பதிலாக வழிப்பறி தாக்குதல் என்று வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படு கிறது.
Thanks for Your Comments