இன்று சூரியன் மறைந்ததும் மறைந்த உண்மை சூரியன் கலைஞர் !

0
திமுக தலைவர் கருணாநிதி காலமானார். இதைத் தொடர்ந்து அவரது கோபாலபுரம் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். 

காவேரி மருத்துவ மனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கருணாநிதி மறைந்தார்.


இதைத் தொடர்ந்து அவரது உடல் அவர் வாழ்ந்த கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறது.

இதனை முன்னிட்டு கருணாநிதி யின் சென்னை கோபாலபுரம் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் கோபாலபுரம் வீட்டின் அருகே கட்டப்பட்டு வருகின்றன. 

அவரது வீட்டிற்கு இரும்பு நாற்காலிகள் கொண்டு வரப்படு கின்றன. கருணாநிதி யின் கார் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டது. 

இந்நிலையில் வீட்டில் இருந்த பொருட்களும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings