விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி,
மாணவி களை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவி மற்றும்
உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர்.
நிர்மலா தேவி குரல் மாதிரி பரிசோதனை சென்னையில் நடத்தப்பட்டது.
இதை யடுத்து நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த மாதம் விருதுநகர் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு
திலகேஸ்வரி யிடம் 1160 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிர்மலா தேவியின் பேச்சுக்களை சிடிகளாக மாற்றியுள்ள தாகவும்,
160 சாட்சிகளின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் நிர்மலா தேவி, இந்த வழக்கில் கைதான முருகன் மற்றும் கருப்ப சாமிக்காகவே மாணவிக ளிடம் பேசியதாக
பேராசிரியை வாக்கு மூலம் அளித்துள்ள தாகவும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த 3 பேரின் வீடு மற்றும் அலுவலகங் களில் சோதனை நடத்தி, சிம் கார்டு, மெமரி கார்டு,
லேப்டாப் உள்ளிட்ட 123 முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப் பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைக்கு பிறகு இந்த வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரை செய்து
நீதிபதி குலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித் துள்ளது.
Thanks for Your Comments