கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவி னால் ஏற்பட்ட அழிவினால் கேரளா பெரும் பொருளாதார இழப்பை அடைந்துள்ளது.
மாநிலத்திற்கு ரூ. 30 ஆயிரம் கோடி வரையில் இழப்பு நேரிட்டிருக்கலாம் என மதிப்பிடப் பட்டுள்ளது.
மாநிலத்தை கட்டமைக்க பல்வேறு தரப்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்-மந்திரி பினராயி விஜயன் நிவாரண முகாம்களில் இருக்கும் மக்களை நேரில் சென்று பார்த்தார். புனரமைப்பு பணிகளையும் பார்வை யிட்டார்.
பின்னர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், “மாநிலத்தில் மழை குறைந்து, வெள்ளம் வடிய தொடங்கி யுள்ளது.
முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இன்னும் 1,465 நிவாரண முகாம்களில் 4.62 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இதுவரை 3 லட்சத்து க்கும் மேற்பட்ட வீடுகள் சுத்தம் செய்து தரப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட வசதிகளை மீண்டும் மேம்படுத்த ஏராளமான நிதி தேவைப் படுகிறது.
மாநிலத்தின் மறுக்கட்டமைப்பாக கேரளாவில் வாழும் மக்களும், வெளி நாடுகளில் வாழும் கேரள மக்களும்
தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக் காக அளிக்க வேண்டும்.
அனைத்து மக்களாலும் ஒரு மாத ஊதியத்தை அளிப்பது என்பது கடினமானது.
கேரளாவில் வசிக்கும் மக்களும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் ஒவ்வொரு மாதத்தில் 3 நாட்கள் ஊதியத்தை மாநிலத்தின் மறுகட்டமைப்புக் காக அளிக்கலாம்’’ என்று கூறினார்.
Thanks for Your Comments