‘பேஸ்புக்’கில் நேரடி ஒளிபரப்பு செய்து வாலிபர் தற்கொலை !

0
டெல்லி அருகே உள்ள குர்கான் நகரைச் சேர்ந்தவர் அமித் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி, 2 குழந்தைகள் உள்ளனர். 
இவருக்கு மனைவி யுடன் அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். கடந்த திங்கட்கிழமை அது போல் தகராறு ஏற்பட்ட போது, 

அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு, தனது தாய் வீட்டுக்கு புறப்பட தயார் ஆனார்.

அவரை அமித் தடுத்து நிறுத்த முற்பட்டார். தனது பேச்சை மீறி சென்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்று எச்சரித்தார். 

அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவருடைய மனைவி சென்று விட்டார்.


இதை யடுத்து, வேதனை அடைந்த அமித், தனது தற்கொலையை ‘பேஸ்புக்’ சமூக வலைத் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்தார். 

சரியான கோணத்தில் கேமராவை வைத்து விட்டு, மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த வீடியோவை நேரடியாக பார்த்த யாரும் தற்கொலையை தடுக்க முயற்சிக்க வில்லை.

மேலும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், அமித்தின் உடலை அவருடைய குடும்பத்தினர் தகனம் செய்து விட்டனர். 

வீடியோ காட்சி ‘வைரல்’ ஆனதால் தகவல் அறிந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அமித், மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர் என்றும், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings