மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மோட்டார் வாகன ஓட்டுனர்கள் தமிழகம், தெலுங்கானா, கர்நாடக
மற்றும் பல மாநிலங்கள் முழுவதும் ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
சாலை பாதுகாப்பு திருத்த மசோதாவை மாநிலங் களவையில் நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு திண்டாடி வருகிறது.
இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மோட்டார் தொழிலில் தொடர்புடைய
அனைத்து சங்க கூட்டமைப்பு இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
போராட்டத்துக்கு ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில்,
ஆட்டோ, டெம்போ தொழிலாளர்கள் சங்கம், மணல் லாரி, பார்சல் சர்வீஸ், லாரி, மினி லாரி, வாகன உதிரி பாகக்கடைகள், சுற்றுலா வாகனம்,
தனியார் பேருந்து தொழிளாளர்கள் சங்கம் என பலதரப்பினரும் போராட்டத்து க்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும்,
300 விழுக்காடு உயர்த்தப் பட்டுள்ள இன்சூரன்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச ஜிபிஎஸ் வழங்க வேண்டும், ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க வேண்டும்.
பொது போக்குவரத்து அனைத்திற்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்,சுய தொழிலை அழிக்கும் ஓலா,
உபேர் போன்ற நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கை களை முன் வைத்து இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது .
மோட்டார் வாகன தொழிலாளர் களின் வேலை நிறுத்தத்தால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பாதித்துள்ளது .
இதன் காரணமாக பல மாவட்டங் களில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிகளின் அருகே வசிக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவாய்ப்பு.
தங்களின் குழந்தைகளை பெற்றோர்களே அழைத்து வருமாறு ஒருசில பள்ளிகள் தகவல் அனுப்பியுள்ளன.
Thanks for Your Comments