கோல்டன் பாபா' எனப்படும், சாமியார், சுதிர் மக்கார், 'கன்வர் யாத்திரை'யில், ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து, பங்கேற்றுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், காவ்முக், கங்கோத்ரி, பீஹாரில் உள்ள சுல்தான்கஞ்ச் ஆகிய இடங்களில் இருந்து,
புனித கங்கை நதி நீரை எடுத்து வரும் நிகழ்ச்சி, கன்வர் யாத்திரை என அழைக்கப் படுகிறது.
இந்த யாத்திரையில் பங்கேற்கும், லட்சக்கணக் கான பக்தர்கள், கங்கை நீரை எடுத்து வந்து,
தங்கள் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் வைத்து பூஜை செய்வர்.
பிரசித்தி பெற்ற இந்த யாத்திரையில், 'கோல்டன் பாபா' சாமியார், ஆண்டு தோறும் தவறாமல் பங்கேற்று வருகிறார்.
தொடர்ந்து, 25வது ஆண்டாக, இந்தாண்டும், கன்வர் யாத்திரை யில் பங்கேற்றுள்ள கோல்டன் பாபா,
20 கிலோ எடைஉள்ள, ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அணிந்துள்ளார்.
கடந்த, 2016ல் நடந்த யாத்திரையில், கோல்டன் பாபா, 12 கிலோ எடையளவு தங்க நகைகளை அணிந்திருந்தார்;
2017ல், அவர் அணிந்த நகைகளின் எடை, 14.5 கிலோ. கோல்டன் பாபா அணிந்துள்ள நகைகளில்,
21 தங்க சங்கிலிகள், கடவுளர் உருவங்கள் பதித்த, 21 பதக்கங்கள், தங்க ஜாக்கெட் உள்ளிட்டவை உள்ளன.
கோல்டன் பாபாவின் பின், அவரது படை, பரிவாரங்கள், பல வாகனங்களில் வருவது வழக்கம்.
நகைகள் தவிர, 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'ரோலக்ஸ்' கைக்கடிகார த்தையும் அவர் அணிந்து உள்ளார்.
அவர் பின் அணிவகுத்து செல்லும் வாகனங் களில், 'பி.எம்.டபிள்யு., பார்ச்சுனர்ஸ், ஆடி, இன்னோவா' உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களும் அடக்கம்.
Thanks for Your Comments