சென்னை குரோம்பேட்டையில் இருச்சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவர் அதி வேகமாக சென்ற போது மேம்பாலத்தின் மீது மோதி விபத்துக் குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் கஞ்சா பையுடன் 40 அடி உயர மேம்பாலத்தின் மீதிருந்து கீழே விழுந்து பலியானார்
ஜிஎஸ்டி சாலையில் சென்னை குரோம் பேட்டை அமைந்துள்ளது எம்.ஐ.டி மேம்பாலம்.
வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் தாம்பரத்தில் இருந்து இருச் சக்கர வாகனத்தில் இருவர் அதிவேகத்தில் வந்துள்ளனர்.
மேம்பாலத்தின் ரவுண்டானா வில் இருந்து வலது புறம் திரும்பி அஸ்தினாபுரம்
செல்ல முயன்ற இருவரும் வேகத்தை கட்டுப் படுத்த முடியாமல் மேம்பாலத்தின் தடுப்பில் மோதினர்.
இந்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவர் மேம்பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இந்த காட்சியை பார்த்த சாலையில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கீழே விழுந்த 18 வயதான இளைஞர் விஜய் பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
அவர் மாட்டியிருந்த பையில் கால் கிலோ அளவிற்கு கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப் பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரது உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.
மேம்பாலத்தின் மீது வாகனத்துடன் விழுந்து காயமடைந்த மதிவாணன் என்ற இளைஞர் காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
உயிரிழந்த விஜய்பிரகாஷ் மற்றும் மதிவாணன் இருவரும் அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும்
விபத்து நடந்த போது இருவரும் கஞ்சா போதையில் இருந்திருக்க லாம் என சந்தேகிக்கின்றனர்.
Thanks for Your Comments