மெரினாவில் கருணாநிதி யின் உடலை அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து முக ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
ஆனந்த கண்ணீர்
இதனை கேட்ட கருணாநிதி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கனிமொழி, துரை முருகன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
கதறிய ஸ்டாலின்
ஒருவரை யொருவர் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். ஸ்டாலின் துரைமுருகன் மார்பில் சாய்ந்தபடி கதறி அழுதார்.
அவரை துரைமுருகன், ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் ஆசுவாசப் படுத்தினர்.
கண்ணீருடன் வணங்கிய ஸ்டாலின்
பின்னர் கண்ணீர் விட்டபடி தொண்டர்களை பார்த்து கைக்கூப்பி வணங்கினார் ஸ்டாலின்.
தொண்டர்களும் உயர் நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியில் விசில் அடித்தும் கைத்தட்டியும் ஆரவாரம் செய்தனர்.
துயரத்திலும் ஒரு நிம்மதி
கருணாநிதி மறைந்த துக்கத்தில் இருந்த அவரது குடும்பத்தி னருக்கு மெரினாவில்
இடம் ஒதுக்க முடியாது என்ற தமிழக அரசின் அறிவிப்பு பேரிடியாக இருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தர விட்டிருப்பது பெருந்துயரத் திலும் ஒரு மகிழ்ச்சி செய்தியாக உள்ளது.
Thanks for Your Comments