குழந்தையுடன் விமானத்தில் மது அருந்திய பெண் துபாய் சிறையிலடைப்பு !

0
விமான பயணத்தின் போது மது அருந்தியதற் காகத் துபாயில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார் லண்டனைச் சேர்ந்த பெண் மருத்துவர் எல்லி ஹோல்மேன்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் எல்லி ஹோல்மேன். பல் மருத்துவரான இவர், கேரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு லண்டலின் வசித்து வருகிறார். 

இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், லண்டனி லிருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் 

கடந்த ஜூலை 13-ம் தேதி எல்லி ஹோல்மேன் தன் 4 வயது குழந்தை யுடன் பயணித்துள்ளார். 

அப்போது, அவருக்கு உணவுடன் மது வழங்கப் பட்டுள்ளது. எல்லி அதை அருந்தி யிருக்கிறார்.

இதை யடுத்து, துபாய் விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் அதிகாரிகள் நடத்திய சோதனையில், எல்லி ஹோல்மேனின் விசா காலாவதியாகி விட்டதாகக் கூறி யுள்ளனர். 

மேலும், உடனடியாக லண்டனுக்குத் திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தி யுள்ளனர். 

இந்தப் பிரச்னையைச் சரிக்கட்டு வதற்குள், பயணத்தில் மது அருந்தியது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சோதனையின் போது, எல்லி ஹோல்மேனின் மொபைல் போனையும் அதிகாரிகள் கைப்பற்றி யுள்ளனர். 

இதனிடையில், மது அருந்தியதை உறுதி செய்ய அவருக்குப் பரிசோதனையும் நடத்தி யுள்ளனர். இதனால், பிரச்னை குறித்துத் தெரிவிக்க முடிய வில்லை.

இதைத் தொடர்ந்து, எல்லி ஹோல்மேனை கைது செய்த அதிகாரிகள், அவரின் 4 வயது குழந்தையுடன் சிறையில் அடைத்துள்ளனர். 


இதன் பின்னரே விவரம் அறிந்த கேரி துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். தன் மனைவி மற்றும் குழந்தையை ஜாமீனில் எடுத்துள்ளார். 

`ஜெயிலில் உரிய உணவு வழங்கவில்லை. மாற்று உடை தரவில்லை எனவும் கழிவறை மிகவும் அசுத்தமாக இருந்ததாக வும் 

மூன்று நாள் சிறையில் அனுபவித்த கொடுமை களை' கூறியுள்ளார் எல்லி. 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது. தற்போது, இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை யின் போது, `தன் நண்பர்களைச் சந்திப்பதற்காக 5 நாள் விடுமுறையில் துபாய் வந்ததாகவும், 

இதே போல் பல முறை இங்கு வந்திருப்ப தாகவும் எல்லி குறிப்பிட்டுள்ளார். 

தனது விசா காலவதியா வில்லை, அதிகாரிகள் தவறுதலாக விசாரணையை மேற்கொண்டனர்' எனத் தனது தரப்பிலான விளக்கங்களை அளித்துள்ளார். 

வழக்கு விசாரணையை அடுத்தே இந்த விவகாரம் தற்போது வெளியே வந்துள்ளது. 

ஜாமீனில் வெளி வந்துள்ள எல்லி ஹோல்மேன் வழக்கு விசாரணை முடியும் வரை துபாயை விட்டுச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings