சுங்கச் சாவடிகளில் நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களு க்கு தனி வழி அமைக்க வேண்டும் என்ற
சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பணியில் உள்ள நீதிபதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில்,
தனி வழித்தடங்கள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.
தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டி ருந்தனர்.
இதை அமல்படுத்துவதில் சில சிக்கல் இருப்பதால் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்ட மிட்டுள்ள தாகக் கூறப் படுகிறது.
Thanks for Your Comments