தலித்து களுக்கு எதிரான கொடுமை களை தடுக்கும், எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தை, ஏற்கனவே இருந்தது போல்,
மீண்டும் கடுமை யானதாக்க வகை செய்யும், சட்ட திருத்த மசோதாவுக்கு, அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
இதனால், எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அவசியம் இல்லாமல் போகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டால், சம்பந்தப்பட்ட நபரை, விசாரணை இன்றி
உடனடியாக கைது செய்வதற்கு தடை விதித்து, மார்ச்சில், உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மேலும், 'இந்த சட்டத்தின் கீழ், பல விதிகளை வகுத்து, அவற்றை பின்பற்ற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
'முறையான விசாரணை இன்றி ஒருவர் கைது செய்யப் படுவதை, பார்லிமென்ட் கூட அனுமதிக்க முடியாது.
'இந்த விஷயத்தில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, வாழ்க்கை, சுதந்திரம் ஆகிய வற்றுக்கான அடிப்படை உரிமைகளை
பாதுகாப்பதற் காக பிறப்பிக்கப் பட்டது' என, தங்கள் உத்தரவில், நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுகளைச் சேர்ந்த பல அமைப்புகள்,
நாடு முழுவதும் போராட்டங் களில் ஈடுபட்டன. அப்போது ஏற்பட்ட வன்முறை களால், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
'எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தை மீண்டும் கடுமை யானதாக மாற்ற வேண்டும்' என, அந்த சமுதாயங் களைச் சேர்ந்தோர் கூறி வருகின்றனர்.
'ஆக., 9க்குள் இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கா விட்டால், நாடு முழுவதும் மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படும்' என, அவர்கள் எச்சரித் துள்ளனர்.
இதற்கிடையே, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மத்தியில் ஆளும்,
தே.ஜ., கூட்டணியில் உள்ள, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த, எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில், 'எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தை மீண்டும் கடுமை யானதாக்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்' என, வலியுறுத்தப் பட்டது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை குழு, ஏற்கனவே இருந்ததை போல்,
எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தை கடுமை யானதாக மாற்றும் வகையில் தயாரிக்கப்பட்ட சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
இதனால், இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அவசியம் இல்லாமல் போகும் என எதிர் பார்க்கப் படுகிறது.
எஸ்.சி., - எஸ்.டி., சட்ட திருத்த மசோதா, நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Thanks for Your Comments