பலமுறை பயன்படுத்தப்பட்ட ஊசியால் போன உயிர் - அரசு மருத்துவமனை அவலம் !

0
மத்தியப் பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பொது மருத்துவ மனையில் நேற்று கடுமையான காய்ச்சல் காரணமாக இம்தாத் சிங் என்பவர் அனுமதிக்கப் பட்டார். 
அவருக்கு, ஊசி போட்டுள்ளனர். ஊசி போட்ட 5 நிமிடத்தில் அவர் உயிரிழந்துள்ளார். 

அதே நேரத்தில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற 25 பேர் கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், `காய்ச்சல் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந் துள்ளார். 

இதனிடையில், சிகிச்சைக்காக வந்த 25 நோயாளிகளின் உடல்நிலை திடீரென மோச மடைந்ததை அடுத்து அவர்களின் உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பின்னர் இம்தாத் சிங் என்பவர்க்குத் தவறான ஊசியைச் செவிலியர்கள் போட்டதால் தான் அவர் உயிரிழந்த தாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.

இதை யடுத்து போலீஸார் மருத்துவ மனைக்கு விரைந்தனர். 

அப்போது, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியதால் நோயாளிகள் பாதிக்கப் பட்டுள்ளனர், 


அவர்களைக் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் எங்களிடம் முறை யிட்டனர்.

இம்தாத் சிங் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய உத்தர விட்டுள்ளோம். 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' எனக் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பி.கே.ஷர்மா என்ற மருத்துவர் கூறுகையில், `நோயாளிகள் அனைவரு க்கும் ஒரே ஊசியைத் தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி யுள்ளனர்.

பொதுவாக, ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மீண்டும் மற்ற நோயாளிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றால் 

நன்கு காய்ச்சிய சுடுநீரில் போட்டு, அதன் பின்னர் பயன்படுத்த வேண்டும்.

ஆனால், செவிலியர் இதைச் செய்ய வில்லை. அதனால் தான் நோயாளிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்' என்றார். 

எனினும், இந்தக் குற்றச் சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. 

இது தொடர்பாக விசாரனை நடைபெறும் என்று மருத்துவமனை சார்பிலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings