இந்தியாவில் உறவுக்கார நபரை வைத்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமாதாபாத்தை சேர்ந்தவர் திலீப். இவர் மனைவி ஷில்பா.
ஷில்பாவுக்கு கோபால் (40) என்ற நபருடன் இரண்டு ஆண்டுகளாக தொடர்பு இருந்த நிலையில் அவரை திருமணம் செய்ய நினைத்தார்.
இதை யடுத்து திலீப்பை கொலை செய்து விடுமாறு ஷில்பா கோபாலிடம் கூறியுள்ளார்.
ஆனால் இதற்கு கோபால் சம்மதிக்கவில்லை. இதையடுத்து தனது உறவுக்கார நபரான ஹரீஸ் என்பவரை மயக்கிய ஷில்பா
தனது கணவரை கொலை செய்தால் வாழ்க்கை முழுவதும் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
ஷில்பா வார்த்தையில் மயங்கிய ஹரீஸும் திலீப்பை தனியாக ஒரு இடத்துக்கு வ ரவழைத்து அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் சடலத்தை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிசிவி கமெரா மூலம் ஹரீஸை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஷில்பாவின் தூண்டுதல் பேரிலேயே தான் திலீப்பை கொலை செய்ததாக அவர் ஒப்பு கொண்டார்.
இதை யடுத்து ஷில்பாவையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
Thanks for Your Comments