காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள சோபியான், குல்காம், அனந்த்நாக் மற்றும் அவந்திபோரா ஆகிய இடங்களில் உள்ள
காவல் நிலையங் களில் பணி புரிந்து வரும் போலீசார் 6 பேரின் குடும்ப உறுப்பினர் களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.
போலீசாரின் குடும்ப உறுப்பினர்கள் கடத்தப் பட்டதாக வெளியாகிய செய்தி அப்பகுதி யில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பயங்கரவாதி சையத் சலாவுதீனின் மகனை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ள
நிலையில் போலீசாரின் உறவினர்களை கடத்திச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மேலும், கடந்த சில தினங்களாக பயங்கரவாதி களின் உறவினர்கள் இல்லத்தில் நடத்திய சோதனை மற்றும்
அவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் ஆகிய வற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் யுக்தியாக
பயங்கர வாதிகள் மேற்கூறிய கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி யிருக்கலாம் என போலீசார் சந்தேகிக் கின்றனர்.
கடந்த 28 ஆண்டுகளில், போலீசாரின் குடும்ப உறுப்பினர்கள் குறி வைக்கபட்டுள்ள சம்பவம் இது தான் முதல் தடவை யாகும்.
Thanks for Your Comments