விருதுநகரில் பள்ளி மாணவியை கொலை செய்து மாணவர் தற்கொலை !

1 minute read
0
விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி பொன் மகாலட்சுமி, 
19ஐ கத்தியால் குத்திக் கொலை செய்த சட்டக் கல்லுாரி மாணவர் மதன்குமார், 19 துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏழாயிரம் பண்ணை அடுத்த இ.ரெட்டியா பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பொன் மகாலட்சுமி. 

துாத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்தார். 

அதே ஊரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் மதன்குமார். மதுரை சட்டக் கல்லுாரியில் 2 ம் ஆண்டு படித்தார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர். 

அத்தை மகனை திருமணம் செய்ய பெற்றோர் வலியுறுத்தி வருவதாக பொன் மகாலட்சுமி கூறி உள்ளார். 

இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.நேற்று மதியம் 1:30 மணிக்கு தண்ணீர் பிடித்து சென்ற 

பொன் மகாலட்சுமியை வழி மறித்த மதன்குமார் கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் அவர் இறந்தார்.

வீட்டிற்கு சென்ற மதன்குமார், சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக் கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings