வெங்காயம், பூண்டு உரிக்கும் மெஷின் - அசத்தும் உசிலம்பட்டி ப்ரீத்தி !

0
"இந்த இயந்திரம் மூலம் வேலை நேரத்தைக் குறைப்பதுடன், அந்த உணவுப் பொருளை நீண்ட நாள்களு க்குக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும் முடியுமாம். 
வெங்காயம், பூண்டு உரிக்கும் மெஷின்
ஊறுகாய் கம்பெனிகள், கேட்டரிங் சர்வீஸ், பெரிய ஹோட்டல் களுக்கு இந்த இயந்திரம் மிகவும் உதவியா இருக்கும்."
''வெங்காயம் - பூண்டு உரிக்கும் மெஷின் அப்பாவோட மூளை... என்னோட டெக்னாலஜி கலந்தது'' - அசத்தும் உசிலம்பட்டி ப்ரீத்தி

வெள்ளைப் பூண்டு, வெங்காயம் உரிக்கும் மிஷின்களைத் தந்தையுடன் இணைந்து கண்டறிந்து, இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளார் முத்து ப்ரீத்தி.

மதுரை மாவட்டம், உசிலம் பட்டியைச் சேர்ந்த முத்து ப்ரீத்தி, “எங்க தாத்தா காலத்தி லிருந்து எங்கள் குடும்பத்துக்கு இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் பழக்கப் பட்டது. 

தாத்தாவுக்குப் பிறகு அப்பா நாகராஜ் மிஷின்கள் உருவாக்கு வதில் ஆர்வமாக இருதார். மாடர்ன் ரைஸ் மில்களில் பல இயந்திரங் களைச் செய்து கொடுத்து வேலைகளை எளிமை யாக்கினார். 
வயிற்றுப் போக்கு.. இதயக்கோளாறு பிரச்சனையா?
கர்நாடக பொன்னி உள்ளிட்ட வெளிமாநில நெல் அரிசி ரகங்கள், குறைந்த விலையில் பொது மக்களுக்குக் கிடைக்க ஆரம்பிச்சதும், ரைஸ் மில்களுக்குத் தேவைகள் குறைய ஆரம்பிச்சது. 

அதனால், ரைஸ் இயந்திரங் களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. என்ன செய்யலாம்னு யோசிச்சோம். 

ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனங்களில் சென்று பார்த்த போது எலுமிச்சை, வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை 
அசத்தும் உசிலம்பட்டி ப்ரீத்தி !
உரிக்க நிறைய நேரம் தேவைப் படறதையும் சிரமம் இருக்கி றதையும் உணர்ந்தோம். அதற்கான மெஷினைக் கண்டு பிடிக்கலாமே என நினைச்சோம். 
நெஞ்சு வலியை குணமாக்கும் ஆரஞ்சு !
உடனே செயலில் இறங்கின அப்பா, மேனுவல் மெஷின் தயாரிச்சுக் கொடுத்தார். அதற்கு வரவேற்பு கிடைச்சது. 

என்.ஐ.எஃப் தேசிய விருதையும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கையால் வாங்கினார். நான் எம்.டெக் படிக்கும் போதே இதன் மீது ஆர்வம் வந்துச்சு. 
கல்லூரி புராஜெக்ட்டாக, மேனுவலாக இருந்த வெள்ளைப்பூண்டு உரிக்கும் இயந்திரங் களை, ஆட்டோ மிஷினாக மாற்றினேன். 

இப்போ, அதில் பல நுணுக்கங் களைச் சேர்த்து, இந்திய அளவில் பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யறோம்'' என்கிறார்.
ஏழை மக்களின் முந்திரி !
இந்த இயந்திரம் மூலம் வேலை நேரத்தைக் குறைப்பதுடன், அந்த உணவுப் பொருளை நீண்ட நாள்களுக்குக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும் முடியுமாம். 

ஊறுகாய் கம்பெனிகள், கேட்டரிங் சர்வீஸ், பெரிய ஹோட்டல் களுக்கு இந்த இயந்திரம் மிகவும் உதவியா இருக்கும். 

வெள்ளைப் பூண்டு, வெங்காயங் களை உரிச்சு, வெளியூர்களு க்கு பாக்கெட் போட்டும் அனுப்பலா மாம்.
வெங்காயம், பூண்டு உரிக்கும் மெஷின் - அசத்தும் உசிலம்பட்டி ப்ரீத்தி !
'இந்த வெள்ளைப் பூண்டு, வெங்காயம் இருப்பதை மூன்று கட்டமாக செய்கிறோம், முதலில், டிரையர் மெஷினில் வைத்து, டைம் செட் செய்யறது. 
அந்த நிமிடம் தான் முக்கியம்.. சந்திரயானுக்கு திக் திக் நொடிகள்.. இஸ்ரோ சுவாரசியம் !
பிறகு, தூசுகள் அகற்றும் இயந்திரத்தில் கொட்டி, முழுமையாகத் தூசுகளை அகற்றுவது, பிறகு, தோலை உரிக்கும் பகுதியில் செலுத்தி தோல்களை உரிபப்து. 1 மணி நேரத்தில் 100 கிலோ வெள்ளைப் பூண்டுகளை தயார் செய்துட லாம். 

அதே போல், சின்ன வெங்காயத்தை 1 மணி நேரத்தில் 120 கிலோ முதல் 150 கிலோ வரை உரிச்சு எடுக்கலாம். பெரிய வெங்காயம் 100 முதல் 120 கிலோ வரை எடுத்துடலாம். 

கைகளால் உரிக்கும் போது 5 கிலோவுக்கே கடுமையா வலி ஏற்பட்டு விடும். சுகாதாரக் குறைவும் இருக்கும். இந்த இயந்திரம் மூலம் உரிப்பதால், பிரச்னை இருக்காது. 
நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா !
ஆனால், அதிக அளவு வெள்ளைப் பூண்டு, வெங்காயம் உரிப்பவர் களுக்குத் தான் இந்த இயந்திரம் சாத்தியம். பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் பல இடங்களி லிருந்து இயந்திரத்தை வாங்கறாங்க. 

அப்பாவும் நானும் இணைந்து இன்னும் பல கண்டு பிடிப்புகளை உருவாக்குவோம். ஐ.ஏ.எஸ் ஆகறது என்னுடைய கனவு. 
ப்ரீத்தியின் தந்தை நாகராஜ்
அதனுடன் இந்த மாதிரியான கண்டு பிடிப்புகளும் தொடரும்'' எனப் புன்னகைக் கிறார் முத்து ப்ரீத்தி. 
முத்து ப்ரீத்தியின் தந்தை நாகராஜ், “என்னுடைய அனுபவமும் மகளின் டெக்னிக்கல் ஐடியாவும் இணைந்து உருவானது தான் இந்த இயந்திரம். 

இதன் மூலம் கிலோ கணக்கில் உரிக்கும் தொழிலாளர் களின் பணிச்சுமை குறையுது. முதலாளிகளின் சிரமங்களும் தவிர்க்கப்படுது. 
சீனப் பொருள்களு க்குப் போட்டியாக இந்த இயந்திரம் நுணுக்கமாக செயல்படுது. பல ஊறுகாய் நிறுவனங்கள், எங்களைத் தொடர்பு கொண்டு இயந்திரங் களை வாங்கறாங்க'' என்கிறார் பெருமையுடன்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings