குஜராத்தில் மாநிலத்தில், பட்டேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, அகமதாபாத்தில்,
11ஆவது நாளாக உண்ணா நிலை மேற் கொண்டுள்ள ஹர்த்திக் பட்டேலின் ((Hardik Patel))
உடல் எடை 20 கிலோ குறைந் திருப்பதுடன், உடல் நலம் மோசமாகி வருவதாக மருத்துவர்கள் கூறி யுள்ளனர்.
இதையடுத்து, குஜராத் மாநில அரசின் உத்தரவின் படி, ஐசியு அமைப்புடன் கூடிய அவசரகால ஆம்புலன்ஸ்,
ஹர்த்திக் பட்டேல் உண்ணா விரதம் இருக்கும் இடத்தின் அருகே தயாராக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
குஜராத்தில் வாழும் படேல் சிறுபான்மை யினருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி,
பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதியின் ((Patidar Anamat Andolan Samiti)) தலைவர் ஹர்த்திக் படேல், கடந்த மாதம் 25-ம் தேதி உண்ணா நிலையைத் தொடங்கினார்..
11ஆவது நாளாகத் தொடரும் இவரின் உண்ணா நிலைப் போராட்ட த்தைக் கைவிட,
பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Thanks for Your Comments