கொல்கத்தா வில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப் பட்டிருந்த 14 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப் பட்டுள்ளன.
ஹரிதேவ்பூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று எடுத்து புதிதாக வாங்கிய இடம் ஒன்றைச் சுத்தம் செய்யுமாறு வேலை யாட்களைப் பணித்தது.
ஞாயிறன்று பிற்பகல் அவர்கள் சுத்தப் படுத்தும் பணியில் ஈடு பட்டிருந்தனர்.
அப்போது, அங்கு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் 14 குழந்தைகளின் எலும்புக் கூடுகளைக் கண்டறிந்த வேலையாட்கள் அதிர்ச்சி யடைந்தனர்.
எலும்புக் கூடுகளைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for Your Comments