'திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம், 2021ம் ஆண்டு பயன் பாட்டுக்கு வரும்,'
என, இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு பொது மேலாளர், சஞ்சீவ் ஜிந்தால் தெரிவித்தார்.
திருச்சி, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய், குவைத் போன்ற நாடுகளுக்கு விமான சேவை வழங்கப் படுகிறது.
ஆண்டு தோறும், 10 லட்சத்துக்கும் அதிகமான பயணியர் வந்து செல்கின்றனர்.
கடந்த ஆகஸ்டில், திருச்சி வந்த, விமான நிலைய ஆணையக் குழுமத் தலைவர்,
புதிய விமான முனையம் அமைப்பதற்கான ஆலேசானை வழங்கி, அதற்கான திட்ட அறிக்கை வழங்குமாறு தெரிவித்தார்.
இதை யடுத்து, 951 கோடி ரூபாய் மதிப்பில், ஒரே நேரத்தில், 2,900 பயணியரை கையாளும் வகையில்,
60 ஆயிரத்து, 723 சதுர மீட்டர் பரப்பில், புதிய முனையம் அமைக்கப்பட உள்ளது.
புதிய முனையம் அமைக்கும் பணியை, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எஜிஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து, இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு பொது மேலாளர் சஞ்சீவ் ஜிந்தால் கூறியதாவது:
புதிய முனையத்தின் கட்டுமான பணிகள், நவம்பர் முதல் வாரத்தில் துவங்கி விடும். அனைத்து பணிகளையும் முடித்து,
2021 செப்டம்பரில், புதிய முனையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்ட மிட்டுள்ளனர்.
தற்போது, நிலம் அளவீடு, மண் பரிசோதனை, ஆவணங்கள் தயார் செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
புதிய முனையம், 48 சோதனை கவுன்டர்களுடனும், 1,000 கார்கள் நிறுத்தும் வகையில்,
'எலிவேட்டர்' வசதியுடனும், கோல்கட்டா விமான நிலையத்துக்கு இணையான அழகு, வசதியுடன் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Thanks for Your Comments