ஜாவா தீவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலி !

0
இந்தோனேசியா வின் முக்கியமான தீவுகளில் ஒன்றான ஜாவா தீவில், சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலியாயினர். 
மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.

மேற்கு ஜாவா தீவில் சுகாபூமி மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்கு செல்வதற் காக, 

தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 


ஏராளமான கூர்மை யான வழைவுகளை கொண்ட பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் 

கட்டுப் பாட்டை இழந்த பேருந்து 30 மீட்டர் (98 அடி) ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதில் 21 பேர் பலியான துடன், 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர், பலியானவர் களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் விபத்தில் படுகாய மடைந்தவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

இந்தோனேசியா வில் மோசமான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் உள் கட்டமைப்பு காரணமாக சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings