உலகைச் சுற்றி வரும் படகு போட்டியில் பங்கேற்ற போது, நடுக்கடலில் தத்தளித்த,
நம் கடற்படை அதிகாரி, அபிலாஷ் டோமி, 39, மூன்று நாட்களுக்குப் பின் மீட்கப் பட்டார்.
தனி ஆளாக படகில் உலகைச் சுற்றிவரும், 'கோல்டன் குளோப்' போட்டியில், நம் நாட்டின் சார்பில், கடற்படையைச் சேர்ந்த, கமாண்டர் அபிலாஷ் டோமி பங்கேற்றார்.
ஆஸ்திரேலியா வுக்கு அருகே, இந்தியப் பெருங்கடலில் பயணம் செய்த போது, பலத்தக் காற்று வீசியதில், அவரது படகு சேதமடைந்தது.
மேலும், அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து, அபிலாஷ் டோமி, தகவல் அனுப்பி யிருந்தார்.
இதை யடுத்து, அவரை மீட்கும் பணியில், ஆஸ்திரேலிய கடற்படை ஈடுபட்டது.
இந்த மீட்பு பணியில், நம் கடற்படையும் இணைந்தது. டோமியின் படகு இருக்கும் இடத்தை, நம் கடற்படை விமானம் கண்டு பிடித்தது.
இதையடுத்து, அவரை மீட்கும் பணி வேகமெடுத்தது.
இந்நிலையில், நேற்று காலையில், கடலில் மூன்று நாட்களாக தத்தளித்து வந்த டோமியை, ஆஸ்திரேலிய கடற் படையினர் மீட்டனர்.
உடனடியாக அருகில் உள்ள இலே ஆம்ஸ்டர்டாம் தீவுக்கு, அவர் அழைத்துச் செல்லப் பட்டார்.
முதல் உதவிகள் அளித்த பின், அவரை மொரீஷியஸ் அழைத்துச் செல்வதற்காக, நம் கடற்படை போர்க் கப்பல் அங்கு விரைந்துள்ளது.
டோமி மீட்கப்பட்டதை, ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவரு மான, நிர்மலா சீதாராமன்,
'டுவிட்டரில்' வெளியிட்டு உள்ள செய்தியில் உறுதி செய்தார். ''டோமி நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.
இருந்தாலும் சற்று சோர்வாக உள்ளார்,'' என, டோமியின் தந்தை, பி.சி.டோமி தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments