தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் பரிதாப நிலை இது. கடுமையான பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவிக்கிறது, வெனிசூலா.
அந்நாட்டின் பண மதிப்பு, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து விட்டது.
இந்நிலையில், வெனிசூலா வில் புதிய பணத்தை (கரன்சி) அதிபர் நிக்கோலஸ் மதுரோ விரைவில் வெளியிட வுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு வெனிசூலா வின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தைத் தொடும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.
வெனிசூலா வில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக அந்நாட்டின் பணமான ‘பொலிவாரின்’ மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந் துள்ளது.
இதனால் அந்த நாட்டில் தற்போது அத்தியாவசியப் பொருட்களை வாங்க எவ்வளவு பணம் செலவிட வேண்டும் என்பதை அந்தப் பொருளையும்,
அதற்காகச் செலவிட வேண்டிய கட்டுக் கட்டான பணத்தை அருகே அடுக்கி வைத்தும் படமெடுத்து விளக்கி யுள்ளார்,
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப் படக்காரர் கார்லோஸ் கார்சியா ரவ்லிங்ஸ்.
அதன்படி, ஒரு கிலோ தக்காளியின் விலை என்ன தெரியுமா? 50 லட்சம் பொலிவார்கள்.
வெனிசூலா தலை நகர் காரகாசில் 2.4 கிலோ கோழிக்கறி விலை 1.46 கோடி பொலிவார்கள்.
இங்கு சமீபத்தில், ஒரு கழிப்பறைத் தாள் உருளை 26 லட்சம் பொலிவாருக்கு விற்கப்பட்டது.
இரு கைப்பிடி அளவு கேரட்டுகளின் விலை 30 லட்சம் பொலிவார்கள்.
ஒரு கிலோ அரிசியின் விலை 25 லட்சம் பொலிவார்கள்.
ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கின் களுக்கு 35 லட்சம் பொலிவார்கள் செலவிட வேண்டி யிருக்கும்.
ஒரு கிலோ பாலாடைக் கட்டியின் விலை 75 லட்சம் பொலிவார்கள்.
குழந்தைகள் அணியும் ‘நேப்பிஸ்’ விலை 80 லட்சம் பொலிவார்கள். ஒரு கிலோ மாட்டுக் கறியின் விலை 95 லட்சம் பொலிவார்கள்.
நம் நாட்டின் ஒரு ரூபாய், 3546 பொலிவார் களுக்குச் சமம்.
அதே வேளையில், 2 லட்சத்து 48 ஆயிரத்து 520 பொலிவார்கள் கொடுத்தால் தான் ஓர் அமெரிக்க டாலர் கிடைக்கும்.
இப்படி பொலிவார் தொடர்பான கணக்கீடுகள் கிறுகிறுக்க வைக்கின்றன.
கடந்த ஜூலை மாதம் வெனிசூலா வின் பண வீக்கம் 82 ஆயிரத்து 700 சதவீதத்தை எட்டியது.
வெனிசூலா வின் புதிய பணம் விரைவில் அறிமுகப் படுத்தப்பட வுள்ள நிலையில், அதுசார்ந்து நிலவும் குழப்பங்கள்,
கவலைகள் காரணமாக அந்நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைக்கத் தொடங்கி யுள்ளனர்.
பொதுவாக நாம், விலைவாசி அதிகரிக்கும் போது, விண்ணை முட்டும் விலைவாசி என்போம்.
வெனிசூலா விலோ விலைவாசி விண்ணையும் தாண்டிச் செல்கிறதே?
Thanks for Your Comments