விருது நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், சுடுகாட்டு தொழிலாளி உள்ளிட்ட
நூற்றுக்கும் மேற்பட்ட வர்களை வைத்து சுமார் ரூ. 500 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது.
விருதுநகர் ஓ.எம்.எஸ்.வேல் முருகன் பருப்பு மில் உரிமையா ளரான வேல்முருகன், அவரது மைத்துனர் செண்பகம்,
இடைத் தரகர்கள் சோலை ராஜா, செல்வி, உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்ட தாக குற்றஞ் சாட்டப்பட் டுள்ளனர்.
விருதுநகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பலருக்கு வங்கியில் பணம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை காட்டும்
இந்த கும்பல், அவர்களை வங்கிக்கு அழைத்துச் சென்று படிவங்களில் கையெழுத்து
வாங்கிக் கொண்டு ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.
ஆனால் தொழிலாளர்கள் பெயரில் 20 லட்சம் முதல் 80 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்வார்கள்.
தொழிலாளர்கள் பெயரில் பருப்பு மூட்டைகள் இருப்பில் வைப்பதாக வும், அதற்கு கடன் பெறுவதாக வும்,
இதற்கு பதிலாக பணம் தருவதாக வும் வேல்முருகன் கும்பல் ஆசை வார்த்தை காட்டும்.
இதற்கு சம்மதிக்கும் தொழிலாளர்கள் பெயரில் கடன் வாங்கி விட்டு அதனை கட்டாமல் விட்டு விடுவது இந்த கும்பலின் வழக்கம்.
தொழிலாளர்கள் பெயரில் பல லட்ச ரூபாய்க்கு கடன் வாங்கி விட்டு, அதன் கட்டாமல் விட்டதால் விருதுநகரில் பல நூறு பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
பல லட்ச ரூபாய் கடன் வாங்கிய தாக வங்கிகள் அனுப்பிய நோட்டீசை கண்டு மனம் கலங்கி, அதனாலேயே பலரும் உயிரிழந்த கொடுமையும் நிகழ்ந் துள்ளது.
மொத்த வியாபார த்தில் ஈடுபடும் வியாபாரிகள், தங்களிடம் இருப்பில் உள்ள பொருட்களின் மதிப்பில் 80 சதவிகிதம் வரை வங்கிகளில் கடன் பெற முடியும்.
இந்த கடனை பெற , வியாபாரிகள் தங்களிடம் உள்ள பொருட்களை வங்கி அதிகாரி களிடம் காட்ட வேண்டும்.
வங்கியின் கள அலுவலர் அந்த பொருட்களை பார்வையிட்டு, அவற்றின், மதிப்பு, தரம்
ஆகிய வற்றை சரி பார்த்து ஒப்புதல் வழங்கினால், அதன் பின்னர் வங்கி கடன் வழங்கும்.
இந்த நடைமுறையை வேல்முருகன் கும்பல் மிகத் தந்திரமாகப் பயன்படுத்தி, திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது என்பது புகாராகும்.
இதனிடையே மோசடி குறித்து தொழிலாளர்கள் சிலர் கொடுத்த புகாரின் பேரில் தேனி மாவட்டம் பெரிய குளம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா விசாரணை நடத்தி, வேல்முருகன், செண்பகம், சோலைராஜா, சன்னாசி உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளார்.
அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 294 பி, 406,420, 465,468, 471,506/1, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக செண்பகத்தின் மகளும் ஆடிட்டரு மான இந்துமதி, அவரது கணவர் விமல்குமார்,
பெரியகுளம் தென்கரை எஸ்.பி.ஐ வங்கியின் மேலாளர் ராம நாராயணன், வங்கியின் கள அலுவலர் தீபா,
வேர்ஹவுஸ் ஊழியர் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆலை அதிபர் என்ற பெயரில் வலம் வந்த வேல்முருகன் செய்த மோசடிகள் குறித்து பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேல்முருகன் கும்பல் நிலக்கோட்டை, பெரியகுளம், தேனி, தென்கரை ஆகிய நான்கு ஊர்களில்
உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைகளில் மட்டுமே கைவரிசை காட்டி உள்ளது.
இந்த நான்கு வங்கிகளிலும் கள அலுவலராக தீபா என்பவர் பணியாற்றிய கால கட்டத்தில் தான், மோசடிகள் நடைபெற்று உள்ளன.
கள அலுவலரான தீபாதான், இருப்பில் உள்ள பொருட்களை சரி பார்த்து, ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அவர் அளிக்கும் ஒப்புதலின் பின்னரே வங்கி கடன் அளிக்கும் என்பதால், இந்த மோசடியில்
அவருக்கும், வங்கி அதிகாரி களுக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந் துள்ளனர்.
மேலும் வேல்முருகன் கும்பல், நான்கு வங்கிகளிலும் இருப்பில் இருப்பதாக கணக்கு காட்டிய உளுந்து,
பருப்பு, காப்பிக் கொட்டை உள்ளிட்ட வையும் போலி யானவை என்பது தெரிய வந்துள்ளது.
சந்தைகளில் கிடைக்கும் விலை மலிவான நான்காம் ரக பருப்புகளை வாங்கும் இந்த கும்பல்,
அதனை உயர்ரக பருப்பு என இருப்பு காட்டி, அவற்றின் மதிப்பை அதிகரித்து கணக்கு காட்டும்,
இதே நேரத்தில் நூறு மூட்டைகள் இருப்பில் வைத்தால், அதில் 20 மூட்டைகளில் மட்டுமே பருப்பு இருக்கும் என்றும்,
80 மூட்டைகளில் தவிடு மட்டுமே இருக்கும் என்றும் போலீசார் கண்டறிந் துள்ளனர்.
வங்கி அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, பல நூறு கோடி ரூபாய்களை மோசடி செய்ததோடு,
தொழிலாளர்கள் வாழ்வோடும் விளையாடிய வேல்முருகன் உள்ளிட்டோரு க்கு வங்கி அதிகாரிகள்,
உயர் அதிகாரிகள் பலரும் துணை செய்துள்ள தாக போலீசார் கருது கிறார்கள்.
இதனால் மோசடியில் ஈடுபட்டவர் களை பிடிக்க போலீசார் நடவடிக்கையை தீவிரப் படுத்தி உள்ளனர்.
வேல் முருகனும், செண்பகமும் கடந்த 2013 ஆம் ஆண்டு 18 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி எண்ணெய் திருடு போன வழக்கில்,
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments