விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அருகே 6 சவரன் நகைக்காக இளம் பெண்ணைக்
கொலை செய்த ஒருவனைக் கைது செய்த போலீசார், மற்றொருவனை தேடி வருகின்றனர்.
கள்ளக் குறிச்சியை அடுத்துள்ள பெரியமாம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேல் முருகன் மனைவி லதா, கரும்பு வெட்ட தோட்டப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரண் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.
அவர்களுடன் லதா போரடியதை யடுத்து, இருவரும் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தங்கச் சங்கிலி யுடன் தப்பினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிசார், தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
அதில் சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர், தனது நண்பருடன் சேர்ந்து லதாவைக் கொலை செய்தது தெரிய வந்தது.
இதை யடுத்து ராம சந்திரனைக் கைது செய்த போலீசார், தப்பி யோடிய மற்றொருவனைக் தேடி வருகின்றனர்.
Thanks for Your Comments