பிரேசில் நாட்டில் உபேர் நிறுவன ஓட்டுநர் ஒருவர் தன்னை காரில் இருந்து அடையாளம் தெரியாத இடத்தில்
வெளியே தள்ளி விட்டுச் சென்று விட்டதாக பார்வை யற்ற பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நதாலியா சாண்டோஸ் ((Nathalia Santos)) என்பவர்
கடந்த வாரம் ரியோடி ஜெனிரோ நகரில் உபேர் கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு சென்றார்.
அப்போது காரில் ஏசி போடக் கேட்டுக் கொண்டதாக வும், அதற்கு ஓட்டுநர் தன்னை சரமாரியாக வசை பாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது குறைபாடு தான் தனக்கு தண்டனை என்று கூறி அடையாளம் தெரியாத இடத்தில்
அவர் வலுக்கட்டாய மாக இறக்கி விட்டுச் சென்றதால் தான் இலக்கை அடைய மிகவும் சிரமப்பட்ட தாகவும் கூறியுள்ளார்.
இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள உபேர் நிறுவனம் தொடர்புடைய ஓட்டுநரை தனது பணியில் இருந்து
விலக்கி விட்டதாக தெரிவித்துள்ளது. எனினும் ஓட்டுநரின் பெயர் வெளியிடப்பட வில்லை.
Thanks for Your Comments