கருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறை காட்டிய வேகத்தை எஸ்.வி.சேகர்
மற்றும் ஹெச்.ராஜாவை கைது செய்ய ஏன் காட்டவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி யுள்ளார்.
முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏவுக்கு அக்டோபர் 5ம் தேதி நீதிமன்ற காவல் அளிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், இது பற்றி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், உயர் நீதிமன்றத்தை யும், தமிழ்நாடு காவல் துறையையும்
ஒட்டு மொத்தமாக மிகவும் கேவலமாகவும் தரக்குறை வாகவும் விமர்சித்த தாலும்,
இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் இல்லத்தரசி களைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசியதாலும்,
பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும்,
இதுவரை பா.ஜ.க. தேசியச் செயலாளர் திரு எச். ராஜா கைது செய்யப்பட வில்லை.
அவர் காவல்துறைக்கே - காவல்துறையைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசுக்கே சவால் விடும் வகையில் "நான் தலைமறை வாகவில்லை"
என்று மேடைதோறும் பேசி, அதற்கு காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்பு வழங்கி வருவது என்னவகை நியாயம் என்று புரிய வில்லை.
Thanks for Your Comments