இங்கிலாந்தில் நடைபெற்ற ஜெட்பேக் (( JETPACK )) எனப்படும் கடற் பரப்பின் மேலே
அந்தரத்தில் பறக்கும் போட்டியில், அந்நாட்டு விஞ்ஞானி புதிய சாதனை படைத்துள்ளார்.
கைகளில் பொருத்திக் கொள்ளும் வகையிலான, சிறிய வடிவிலான ஜெட் இயந்திரத்தை லாவகமாக இயக்கி,
அந்தரத்தில் பறக்கும் சாகச விளையாட்டு ஜெட்பேக் எனப்படுகிறது.
பிரத்யேக உடையணிந்த போட்டி யாளர்கள், சாமர்த்திய மாக காற்றில் பறப்பார்கள்.
இங்கிலாந்தில் போர்னிமவுத் ((BOURNEMOUTH)) என்ற கடற்கரை நகரில் ஜெட்போக் போட்டி நடத்தப் பட்டது.
ஏராள மானோர் பங்கேற்ற இந்தப் போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் ஏஞ்சலோ குரூபிசிக் ((Dr Angelo Grubisic)),
மணிக்கு 74 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கி புதிய சாதனை படைத்தார்.
Thanks for Your Comments