சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் - புவி வெப்பமயமாதல் !

1 minute read
0
உலகில் வெப்ப மயமாதல் அதிகரித்து வருவதால், துருவ பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி வருவதாக வும், 
இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக வும் ஆய்வுகள் ஏற்கனவே எச்சரித்துள்ளன. 

இந்நிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான மத்திய காலநிலை அமைப்பு வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கை யில், 

சீனாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் பருவநிலை மாறுபாடு காரணமாக புவி வெப்ப மயமாதல் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலை நீடித்தால், புவியின் வெப்பநிலை மேலும் 4 டிகிரியாக உயர்ந்து விடும். 

அந்த வெப்ப நிலையை புவி எட்டும் பட்சத்தில், பல அபாயகரமான விளைவுகள் ஏற்படும். 


குறிப்பாக சீனாவின் ஹாங்காங், ஷாங்காய், டியான் ஜின் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கும். 

இதனால் அங்கிருந்து 5 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற நேரிடும். 

அதே போல் உலக அளவில் 6 கோடி பேர் வசித்து வரும் நிலங்களும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். 

வரும் நவம்பர் மாதம் நடைபெற வுள்ள பருவநிலை மாறுபாடு மாநாட்டில், புவி வெப்ப மயமாதலை 2 சதவிதத் துடன் நிறுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றி, 

நடவடிக்கைகள் மேற் கொண்டால் இந்த அபாயத்தை தவிர்க்கலாம்’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, March 2025
Privacy and cookie settings