சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பட்டா கத்தியுடன் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத் தியது.
சென்னை பிராட்வேயிலிருந்து காரனோடை க்குச் செல்லும் 57 எஃப் வழித்தட பேருந்தில்
மாநிலக் கல்லூரி மாணவர்களின் 'கத்தி' சாகசம் ஒரு வாரத்துக்கு முன்பு அரங்கேறியது.
இந்தக் காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியதால், சம்பந்தப் பட்ட மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட் டுள்ளார்கள்.
முன்பு ரயிலில் கத்தியுடன் உலா, ரயில் நிலையங் களில் கத்திச் சண்டை என மாணவர் களின் போக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில்,
தற்போது பேருந்தில் மாணவர்களின் கத்தி கலாச்சாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 4 மாணவர் களை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த 4 மாணவர்களும் நிர்வாகத்தால் கல்லூரி யில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
Thanks for Your Comments