பரமக்குடியில் 'டிவி' நிருபரை தாக்கிய பா.ம.க., வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பரமக்குடி காந்தி சிலை அருகில் ஸ்டூடியோ நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர் பாலிமர் டிவி' நிருபராக உள்ளார்.
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன் பா.ம.க.,அன்புமணி 'வைகையை மீட்போம்,'
என்ற பிரசாரத்தை மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை மேற்கொண்டார்.
இதில் கூட்டத்திற்கு வந்தவர்களை பணம் கொடுத்து அழைத்து வந்ததாக மற்றொரு 'டிவி'யில் செய்தி வந்தது.
ஆனால் சந்திரசேகர் தான் இந்த செய்தியை கொடுத்துள்ளார் எனக்கருதி பா.ம.க. ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று முன்தினம் இரவு அவரின் கடையில் புகுந்து தாக்கியுள்ளனர்.
மேலும்,அருகில் இருந்த மற்றொரு'டிவி' நிருபரும் தாக்கப்பட்டார். சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது தங்கராஜ் உட்பட நான்கு பேர் மீது இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
Thanks for Your Comments