தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜனை பார்த்து விமானத்தில் வைத்து பாசிச பாஜக ஒழிக என
முழக்கமிட்ட மாணவி சோபியா வின் பின்புலம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், கண்ட இடங்களில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என கூறினார்.
தமிழிசை யின் புகாரை ஏற்று மாணவி சோஃபியாவின் பின்புலம் குறித்து விசாரணை நத்தப்படும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அழகிரியின் பேரணிக்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப் பட்டதா?
என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதே நோக்கம் என்றும்,
திமுக தங்களுக்கு எப்பொழுதுமே எதிரிக் கட்சிதான் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 50 சதவீதமாக குறைத்து,
விலை உயர்வை தடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத் தினார்.
Thanks for Your Comments