சென்னையில் மென் பொறியாளரை அடித்து கொலை செய்து விட்டு வழுக்கி விழுந்து அவர் இறந்ததாக போல நாடகமாடிய
நண்பரை காவல் துறையினர் கைது செய்தனர். உறவாடி கெடுத்த நண்பனை ஒரே அடியில் பழித்தீர்த்த பகீர் பின்னணி
சென்னை ஜெ.ஜெ, நகர் கலைவாணர் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்
வசித்து வந்த ரங்கநாதன் என்ற மென் பொறியாளர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்.
அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. அவர் வழுக்கி கீழே விழுந்து இறந்ததாக
உடன் தங்கி இருந்த நண்பர் பாரதிராஜா என்பவர் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
சடலத்தை பிணகூறாய்வு செய்த அரசு மருத்துவ மனை மருத்துவர்கள், தலையில் தாக்கப் பட்டதால்
ரங்கநாதன் உயிரிழந்திருக்க லாம் என்றும் அவர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர்.
இதை யடுத்து அவருடன் தங்கி இருந்த பாரதிராஜா என்பவரை பிடித்து விசாரித்த போது
மென்பொறியாளர் ரங்க நாதனின் கொலைக்கான மர்மம் வெளிச்சத்து க்கு வந்தது.
பாரதிராஜா வின் அண்ணன் மேற்கு முகப்பேரில் மனைவி யுடன் வசித்து வருகிறார்.
விடுமுறை நாட்களில் பாரதிராஜா, நண்பன் ரங்கநாதனை, தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
அப்போது பொறியாளர் ரங்கநாதன், பாரதிராஜாவின் அண்ணன் குடும்பத்தின ருடன் நெருங்கி பழகினார்.
பாரதிராஜா வும், அவரது அண்ணனும் கடைக்கு வேலைக்கு புறப்பட்டு சென்ற பின்னர்
அவர்கள் வீட்டிற்கு ரகசியமாக சென்று வரும் அளவுக்கு ரங்கநாதனின் பழக்கம் நெருக்கமானது.
பாரதிராஜா வின் அண்ணன் மனைவி யுடன் முறையற்ற தொடர்பு ஏற்ப்படுத்திக் கொண்ட அவர் வீட்டிற்கு ரகசியமாக வந்து செல்லும் தகவல் பாரதிராஜாவு க்கு தெரிய வந்துள்ளது.
இதை யடுத்து பாரதிராஜா, ரங்கநாதனை எச்சரித்துள்ளார். அதற்கு தானாக செல்ல வில்லை என்றும்
அண்ணன் மனைவி அழைத்ததால் சென்ற தாகவும் கூறியதோடு,
சம்பவத்தன்றும் பகல் நேரத்தில் பாரதிராஜா வின் அண்ணன் மனைவியை சந்திக்க சென்றுள்ளார் ரங்கநாதன்.
தகவல் அறிந்து ஆத்திர மடைந்த பாரதிராஜா, கடையில் இருந்து தங்கும் இடத்துக்கு திரும்பி உள்ளார்.
அங்கு மது போதையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ரங்கநாதனை இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கி உள்ளார்.
ஒரே அடியில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான ரங்கனாதனை வழுக்கி விழுந்து உயிரிழந்த தாக கூறி
கொலையை மறைக்க முயன்றுள்ளார் பாரதிராஜா என்று சுட்டிக் காட்டுகின்றனர் காவல் துறையினர்.
பாரதிராஜாவை கைது செய்த காவல் துறையினர், அவர் கொலைக்கு பயன் படுத்திய இரும்பு கம்பியையும் பறிமுதல் செய்தனர்.
தன்னுடன் உறவாடி தனது அண்ணனின் திருமண வாழ்வை கெடுத்த நண்பனை
ஒரே அடியில் தீர்த்து கட்டியதாக பாரதிராஜா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
Thanks for Your Comments