தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழா சென்னை எண்ணூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ். வி.சேகர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில்
வெற்றி பெற்ற பள்ளி மாணவர் களுக்கு மேடையில் வைத்து பரிசகளை வழங்கினார்.
அதனை யடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் மைக்கில் மாணவர் களிடையே பேசினார்.
அப்போது மேடை அருகே இருந்த ஒலிபெருக்கி கருவி (அம்பிளிபயர்) திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதனால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்ததோடு மின்சாரமும் தடைபட்டது.
இதனால் கலவரமடைந்து மேடையில் இருந்த பிரமுகர்களும், விழாவை பார்த்துக் கொண்டிருந்த
மாணவ -மாணவிகளும் அலறியடித்து கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின் சிறிது நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் மின்சப்ளை வந்தபின் மீண்டும் விழா தொடங்கியது.
அப்போது பேச்சை பாதியில் விட்ட நடிகர் எஸ்.வி.சேகர் தொடர்ந்து பேசினார்.
Thanks for Your Comments