தென்னாப்பிரிக்கா வில் குரூஜர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு வெள்ளை நிற அரிய வகையை சேர்ந்த
தாய் காண்டாமிருகம் ஒன்று புதிய குட்டியை ஈன்றது. அது தனது குட்டி யுடன் பூங்காவில் சுற்றி திரிந்து வந்தது.
இந்த நிலையில், விலங்கு களை அதன் ரோமம், கொம்பு போன்ற பொருட்களுக் காக வேட்டை யாடும் கும்பல் ஒன்று தாய் காண்டா மிருகத்தினை கொன்றுள்ளது.
இந்த கும்பல் குட்டி காண்டா மிருகத்தினை யும் கோடாரிகளால் தாக்கியுள்ளது.
இது போன்ற கும்பல்கள் காண்டா மிருகங்களை தாக்கி அவற்றின் கொம்புகளை நல்ல விலைக்கு விற்று விடுகின்றன.
இந்த குட்டி காண்டாமிருகம் கும்பலிடம் இருந்து தப்பியுள்ளது. ஏனெனில் அதற்கு இரண்டு கொம்புகளும்
இன்னும் வளர வில்லை. அதனால் கும்பல் அதனை உயிருடன் விட்டு விட்டு சென்றுள்ளது.
ஆனால் இறந்து கிடந்த தாய் காண்டா மிருகத்தின் அருகேயே பல மணி நேரம் அதனை விட்டு பிரிய மறுத்து குட்டி காண்டாமிருகம் காயத்துடன் இருந்துள்ளது.
பூங்கா ஊழியர்கள் அங்கு வந்து அதனை மீட்டு அருகில் உள்ள காண்டா மிருகங்களுக் கான வன காப்பகத்தில் ஒப்படைத் துள்ளனர்.
அதற்கு ஆர்தர் என பெயரிட்டு 3 மாதங்களாக வளர்த்து வருகின்றனர். இதுபற்றி கம்பிரியா விலங்குகள் பூங்காவின்
தலைமை செயல் அதிகாரி கேரன் புரூவர் கூறும் பொழுது, மிக குறைந்த வயதில் அதனிடம் இருந்து தாயை பறித்துள்ளனர்.
தொடர்ந்து தாயை அது தேடி வருகிறது. அது அச்சத்தில் இருந்து மீள நீண்ட நாட்கள் ஆகும் என கூறி யுள்ளார்.
Thanks for Your Comments