மலேஷியா வில் இருந்து, இன்று எண்ணுார் துறை முகத்திற்கு வரும் மணலை, 'ஆன்லைன்' வழியாக
விற்பனை செய்வதற் கான நடவடிக்கையை, பொதுப்பணித் துறை துவங்கியுள்ளது.
50 ஆயிரம் டன், மணல், இறக்குமதி ,ஆன்லைன், வழியாக விற்க ,முடிவு
ஆறுகளில் இருந்து அதிகம் மணல் அள்ளிய தால், அவற்றின் நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, ஆறுகளில் இருந்து மணல் அள்ளக்கூடாது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வெளி நாடுகளில் இருந்து, மணல் இறக்குமதி
செய்ய, தமிழக அரசு முடிவெடுத்தது. இதன்படி, முதற் கட்டமாக, மலேஷியா வில் இருந்து, 50 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப் படுகிறது.
இதற்காக, தனியார் நிறுவனத்துடன், பொதுப்பணித் துறையின் சுரங்கங்கள் கண்காணிப்பு பிரிவினர், ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மலேஷியாவி லிருந்து இறக்குமதி யாகும் மணல், கப்பலில், இன்று காலை எண்ணுார் துறைமுகத் திற்கு வருகிறது.
இறக்குமதி மணலை, ஆன்லைன் வழியாக விற்பனை செய்வதற்கு, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுப்பணித் துறை உருவாக்கி யுள்ள, மணல் குவாரிகளுக் கான இணைய தளம் வழியாக, இந்த மணல் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஒரு யூனிட் மணல், 10 ஆயிரம் ரூபாய் என, விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மணலுக்கான கட்டணத்துடன்,கி.மீ.,க்கு தகுந்தபடி, வாகன வாடகைக்கான கட்டணமும் வசூலிக்கப்படும்.
இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மணல் விற்பனையை, வரும், 2ல் துவங்க திட்டமிடப் பட்டுள்ளது.
தேவைக்கேற்ப, வாரத் திற்கு இரண்டு கப்பல்களில் மணல் இறக்குமதி செய்யப்படும்.
எண்ணுார் துறைமுகத்தில் இறக்குமதி யாகும் மணல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங் களுக்கு அனுப்ப படுகிறது.
இதனால், ஆறுகளில் முறைகேடாக மணல் அள்ளுவது கட்டுப்படுத்தப் படும்.
லாரி உரிமை யாளர்கள் கூடுதல் விலைக்கு மணல் விற்பதும் தடுக்கப் படும், என்றார்.
Thanks for Your Comments