சென்னையில் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற நபர் கைது !

0
சென்னை தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில், 
500 ரூபாய் கலர் ஜெராக்ஸ் நோட்டு களை மாற்ற முயன்ற நபர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

இந்த சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவு வெளியாகி யிருக்கிறது. கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், 

தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில், கடந்த 3 மாதங்களாக தங்கி யிருந்து, பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டிருந் துள்ளார்.

இவர், பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று, 


17 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி விட்டு, 500 ரூபாய் நோட்டுகள் மூலம் பணம் செலுத்தி உள்ளார். 

இவற்றில், மாற்றம் இருப்பதை உணர்ந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள், இது குறித்து பீர்க்கன் காரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரகாசை பிடித்து விசாரித்த போது, அந்த 500 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ்கள் என்பது தெரிய வந்தது. 

இதை யடுத்து, பிரகாசை கைது செய்த போலீசார், கம்யூட்டர், ஸ்கேனிங் மிஷின், பிரிண்டர் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings