குழந்தைகளை கொன்ற தாய் நாகர்கோவிலில் கைது !

0
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், 
அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). 

இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீடுகள் வாங்க, கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர். 

கணவன் -மனைவி இருவரும் பட்டப்படிப்பு படித்து உள்ளனர்.

மாத கடைசி என்பதால் நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்று விட்டார். 

வீட்டில் அவருடைய மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.


வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் இரவு வங்கியில் தங்கி விட்டார். 

நேற்று அதிகாலையில் அவர், தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே அபிராமியின் மொபட் இல்லை. 

எனவே அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தை களுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.

ஆனால் அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். 

இதனால் சந்தேகம் அடைந்த விஜய், தனது மனைவி யின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் பதறிப்போன விஜய், மீண்டும் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். 

வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புற மாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. விஜய், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

தனது 2 குழந்தைகளு க்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, போலீசுக்கு பயந்து அபிராமி தப்பிச் சென்று விட்டது தெரிந்தது. 

இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

இதற்கிடையில் நேற்று காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர் களின் செல்போன்களு க்கு அபிராமியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. 

அதில் அவர், “எனது குழந்தைகளே சென்று விட்ட பிறகு, இனி நான் இருந்தால் என்ன?, செத்தால் என்ன?” என குறிப்பிட்டு இருந்தார்.

அதை பார்த்த விஜய், “ஏன் இப்படி செய்தாய்? எனக்கேட்டு மீண்டும் மனைவியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். 

ஆனால் அவரிடம் இருந்து அதற்கு பதில் வரவில்லை. இதனால் அவரது செல்போனுக்கு விஜய், 


தொடர்பு கொண்ட போது மீண்டும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்த போது, கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. 

எனவே அபிராமி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பஸ்சில் வெளியூர் தப்பிச் சென்று இருக்கலாம் என தெரிய வந்தது.

குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. 

தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளு க்கு விரைந்தனர்.

இந்த நிலையில், பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற 

தாய் அபிராமி நாகர் கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். 

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings