ஏமனில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய தாக எழுந்த குற்றச் சாட்டைத் தொடர்ந்து சவுதிக்கு ஏவுகணைகள் விற்பதை ஸ்பெயின் நிறுத்தி யுள்ளது.
இது தொடர்பாக பேசிய ஸ்பெயின் பாதுகாப்புத் துறை செயலாளர் , லேசர் வழிகாட்டி உதவியுடன்
சவுதிக்கு 400 ஏவுகணை களை வழங்க 2015ம் ஆண்டு ஒப்பந்தம் போடப் பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
10 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்திற் கான தொகையை சவுதி ஏற்கனவே கொடுத்து விட்ட தாகவும்,
அவ்வப்போது ஏவுகணைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஏமனில் பொது மக்கள் இருக்கும் இடத்தை
குறி வைத்து சவுதி தாக்குவது உறுதி செய்யப் பட்டுள்ள தாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே மனித உரிமை மீறலில் ஈடுபடும் சவுதிக்கு ஏவுகணை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.
Thanks for Your Comments