நாட்டில் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை என்ற தகவல் வெளியாகி யுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால், நாட்டின் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை. மற்ற மாநிலங்களை விட வட கிழக்கு மாநிலங்களின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது.
மிசோரமில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் உள்ளன.
ஆனால், மேகாலயா மாநிலத்தில் உள்ள 41 கிராமங்களில் ஒரு பள்ளிகள் கூட கிடையாது.
பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
கோவா பற்றிய விவரம் ஏதும் கிடைக்க வில்லை. இவ்வாறு அந்த புள்ளி விவரத்தில் கூறப் பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 107452 கிராமங்களில் 3474 கிராமங்களில் பள்ளிகள் இல்லை,
அடுத்ததாக பீகார் மாநிலத்தில் 1493 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. அடுத்து மேற்கு வங்க மாநிலம் 1277 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.
தொடர்ந்து கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை,
மத்திய பிரதேசம் ராஜஸ்தான் முறையே 1025 மற்றும் 1000 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.
தென்னிந்தியா வில் கேரளாவில் தான் 1553 கிராமங்களில் 3 கிராமங்களில் மட்டும் பள்ளிகள் இல்லை.
தமிழகத்தில் 170891 கிராமங்களில் 47 கிராமங்களில் மட்டும் தான் பள்ளிகள் இல்லை.
தெலுங்கானா வில் 10434 கிராமங்களில் 55 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.
கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.
ஆந்திராவில் 28293 கிராமங்களில் 154 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.
Thanks for Your Comments