மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த் !

0
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜய காந்துக்கு நேற்று முன்தினம் இரவு ‘திடீர்’ உடல்நல குறைவு ஏற்பட்டது. 
அவர் உடனடியாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். 

அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 

சிகிச்சையில் அவர் உடல் நலம் சீரடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல் நிலை 


ஓரளவு சீரடைந்ததை தொடர்ந்து, அவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வார்டுக்கு மாற்றப் பட்டார். 

விஜயகாந்த் வேகமாக குணமடைந்து வருவதாக வும், ஆஸ்பத்திரி யில் இருந்து 

இன்று (ஞாயிற்றுக் கிழமை) அவர் டிஸ்சார்ஜ் செய்யப் படலாம் என்றும் ‘மியாட்’ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலை யில், சென்னை மியாட் மருத்துவ மனையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings