சீனாவில் ஒரு மழலையர்ப் பள்ளியில் சிறாரையும் அவர்களின் பெற்றோரை யும் வரவேற்கும் வகையில்
ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதற்குப் பலரும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
சீனாவின் சென்சென் நகரில் வாழும் அமெரிக்க எழுத்தாளரான மைக்கேல் ஸ்டேண்டர்ட்டும்
அவர் மனைவியும் தங்கள் குழந்தை களை அங்குள்ள மழலையர்ப் பள்ளியில் சேர்க்கச் சென்றுள்ளனர்.
சிறாரை வரவேற்கும் வகையிலும் பெற்றோரைக் கவரும் வகையிலும் பள்ளி வளாகத்தில்
கம்பத்தைச் சுற்றி ஆடும் ஒருவகை ஆபாச நடனத்தை அரங்கேற்றி யுள்ளனர்.
இதைக் காணப் பிடிக்காதப் பெற்றோர் அங்கிருந்து வெளியேறி யுள்ளனர்.
இவ்வகை நடனத்தைக் கற்றுத் தரும் நடனப் பள்ளிக்கு விளம்பர மாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்துச் சமூக வலைத் தளத்தில் பள்ளி முதல்வரை நீக்க வேண்டும் என்று கண்டனக் கணைகள் குவிந்தன.
இதை யடுத்து மழலையர்ப் பள்ளியின் முதல்வர் லாய் ரோங் மன்னிப்புக் கேட்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.
பெற்றோரை வரவேற்கவே தான் நடனத்துக்கு ஏற்பாடு செய்ததாகவும் அந்த நடனம் எப்படி யிருக்கும் எனத் தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப் பிட்டிருந்தார்.
Thanks for Your Comments