கடலில் மூழ்கி மாணவர்கள் உயிரிழப்பு - கடற்கரையில் குளிக்க தடை !

0
புதுச்சேரியில் கடலில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து கடற்கரை யில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், கடற்கரையில் செயற்கை மணற்பரப்பை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. 

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வம் மிகுதியால் 


அப்பகுதி கடலில் இறங்கி குளிப்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடற்கரையில் குளித்த இரு கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதை யடுத்து கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. கடற்கரை யில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், 

கடலில் இறங்கி தத்தளிப்பவர் களை காப்பாற்ற சுற்றுலா துறை சார்பில் நீச்சல் வீரர்கள் அடங்கிய கடலோர மீட்பு குழுவினரும் பணி அமர்த்தப் பட்டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings