ஜெயலலிதா, முதல்வராக இருந்த வரை, வெளிநாடு செல்ல முடியாமல் தவித்த அமைச்சர்கள்,
தற்போது, அரசு செலவில், வெளி நாடுகளுக்கு பறந்தபடி உள்ளனர். அவர்கள் தயவில், அதிகாரிகளு க்கும், 'பாரீன் டூர்' யோகம் அடித்துள்ளது.
ஜெ., முதல்வராக இருந்த போது, வெளிநாடு சென்றதில்லை.
அதே போல, தன் அமைச்சரவை யில் உள்ளவர்கள், வெளிநாடு செல்லவும் அனுமதிக்க வில்லை.
ஓரிருவர் மட்டும், முதலீட்டாளர் மாநாடு நடந்த போது, வெளிநாடு சென்று வந்தனர்.
அதே போல, அமைச்சர் கள், டில்லி செல்வதும் குறைவு. பெரும்பாலும், மத்திய அரசுக்கு, ஜெ., கடிதம் எழுதுவார்.
முதல்வர் பங்கேற்க வேண்டிய கூட்டங்களு க்கு, அவர் செல்ல முடியா விட்டால், ஓர் அமைச்சரை அனுப்பி வைப்பார்.
இதன் காரணமாக, வெளிநாடு செல்ல விரும்பிய அமைச்சர்களும், ஜெ.,யிடம் அனுமதி கேட்க பயந்து,
தங்களின் வெளிநாட்டு பயண ஆசையை, தங்களுக் குள்ளேயே புதைத்துக் கொண்டனர்.
ஜெ., மறைவுக்கு பின், நிலைமை மாறி விட்டது.
தற்போது அமைச்சர்கள், அரசு செலவில், அரசு முறை பயணமாக, பிரிட்டன், பிரான்ஸ்,
ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, சீனா என, விரும்பிய நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், பெஞ்சமின், பாண்டியராஜன்,
செங்கோட்டையன், ஜெயகுமார், வேலுமணி, நடராஜன் என, வெளிநாடு சென்று வந்துள்ள, அமைச்சர்கள் பட்டியல் நீண்டு வருகிறது.
அவர்களுடன் சேர்ந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், வெளிநாடு சென்று வந்தபடி உள்ளனர்.
'எதற்காக வெளிநாட்டு பயணம் செல்கின்றனர்; அங்கு, யாரை சந்திக்கின்றனர்;
இதனால், தமிழகத்திற்கு என்ன பயன்?' என, எந்த விபரத்தையும், அமைச்சர்களோ, அதிகாரிகளோ தெரிவிப்ப தில்லை.
சென்று வந்த பிறகும், எந்த விபரத்தையும் தெரிவிப்ப தில்லை.
சில அமைச்சர்கள், வெளிநாடு சென்றுள்ளதற்கு ஆதாரமாக, அங்கு எடுத்த புகைப் படங்களை மட்டும், செய்தித்துறை வெளியிடுகிறது.
அதேபோல், அமைச்சர்கள் அனைவரும், தங்கள் துறை சார்ந்த மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக, அவ்வப்போது டில்லி சென்று விடுகின்றனர்.
வெளிநாடு, டில்லி, சொந்த ஊர் என, அமைச்சர்கள், 'பிசி'யாக இருப்பதால், பொது மக்கள், கட்சியினர், அவர்களை பார்ப்பது அரிதாக உள்ளது.
ஜெ., இருந்த போது, அவர் கோட்டைக்கு வருகிறார் என்றால், அனைத்து அமைச்சர்களும் ஆஜராகி,
அணிவகுத்து நிற்பர். அவர், வீடு திரும்பிய பின் தான், கோட்டை யிலிருந்து கிளம்புவர்.
தற்போது, அமைச்சர்களை, அலுவலக த்திலும் சந்திக்க முடியவில்லை; வீட்டிலும் பார்க்க முடிவதில்லை என்பதே, பொது மக்களின் புகாராக உள்ளது.
Thanks for Your Comments