இங்கிலாந்தை சேர்ந்த 22 வயதான ஹைடன் பிறக்கும் போது பெண்ணாக பிறந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளு க்கு முன்னர்
அவர் உடலில் மாற்றம் ஏற்பட்டதை யடுத்து ஆணாக மாறும் சிகிச்சையை செய்து கொண்டார்.
இதை யடுத்து கடந்தாண்டு பேஸ்புக் நண்பர் ஒருவரின் விந்தணுவை தனது கர்ப்பபையில் செலுத்தி கொண்டு அதன் மூலம் கர்ப்பமானார் ஹைடன்.
பின்னர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து, இங்கிலாந்தில் குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் தனது மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையை ஹைடன் தற்போது மேற்கொண்டு வருவதாக அவரே தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட சிகிச்சை ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் £19k செலவிலான இறுதிக் கட்ட அறுவை சிகிச்சையை அடுத ஆண்டு செய்து கொள்ள இருக்கிறார்
ஹைடன். இது குறித்து ஹைடன் கூறுகையில், எனக்கு கிட்டத் தட்ட முழுமையான வாழ்க்கை அமைந்துள்ளது.
அழகான குழந்தைக்கு தந்தையாகி யுள்ளேன், இறுதியான அறுவை சிகிச்சை முடிந்து விட்டால் என்னை நான் முழுவதுமாக உணர்வேன் என கூறி யுள்ளார்.
Thanks for Your Comments