டெலியில் பெண் ஒருவரின் கிரெடிட் கார்டு தகவல்களை திருடி ரூ. 50 ஆயிரத்தை ஏமாற்றியது
தொடர்பாக விகாஸ் ஜா என்ற வாலிபரை போலீசார் கடந்த பிப்ரவரியில் கைது செய்தனர்.
இதனை யடுத்து ஜாமீனில் வெளியே வந்த விகாஸ் தொடர்ந்து சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி பகுதியில் பலரது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் தகவல் களை திருடி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
135 வழக்குகள் இவ்வாறு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வழக்குகளில் சைபர் கிரைம் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
பல்வேறு வழக்குகளில் விகாஸ்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் சோதனை நடத்திய போது விகாஸிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள், ஒரு டெபிட் கார்டு, சிம் கார்டுகள் மற்றும் ரூ. 17.70 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் ஆனந்த் குமார் பேசுகையில், “எங்களுக்கு இப்பகுதியை சேர்ந்த
மக்களிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்துள்ளது, தொடர்ந்து கண்காணித்த தில் விகாஸை கைது செய்துள்ளோம்,” என கூறியுள்ளார்.
மோசடி செய்து கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
அதிகமான பணத்தை பயணத்தி ற்கும், இரவு விடுதிகளு க்கும் செலவு செய்துள்ளார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பாதிக்கப் பட்டவர்களின் இ-மெயில் ஐடியை ஹேக் செய்து அதன் மூலம் பெறப்படும் தகவல்கள் மூலம் வங்கி கணக்குகளில் கை வரிசையை காட்டி யுள்ளார்.
பாதிக்கப் பட்டவர்களு க்கு பெரும் பரிசுதொகை என ஆசை வார்த்தை கூறி மொபைலில் தகவல் அனுப்பி, அவர்களுடைய இ-மெயில் ஐடியை பெற்றுள்ளார்.
பின்னர் அதனை ஹேக் செய்து வங்கி கணக்கில் மொபைல் எண்ணையும் மாற்றியுள்ளார்.
இதனால் வாடிக்கை யாளர்களுக்கு ஒடிபி செல்லாது. மோசடியின் மூலம் வங்கி கணக்கி லிருந்து பணத்தை தன்னுடைய கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
ஒடிபி வங்கியி லிருந்து வராத காரணத்தி னால் பாதிக்கப் பட்டவர்கள் எளிதாக அறிந்துக் கொள்ள முடியாது.
வாடிக்கை யாளர்கள் வங்கியை நாடும் போது தான் அவர்களுடைய கணக்கில் மோசடி நடந்தது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள விகாஸ் ஜா பீகார் மாநிலம் முசாப்பர்பூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. போலீஸ் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் விசாரணையை விஸ்தரித்துள்ளது.
Thanks for Your Comments