வயிறு இல்லாமல் கடைசியாகப் பிரியாணி ருசித்த துபாய் வாலிபர் !

0
புற்று நோய் பாதித்த இளைஞர் ஒருவரின் வயிற்றுப் பகுதி முற்றிலும் அகற்றப்பட வுள்ளது. 
அறுவை சிகிச்சைக்கு முன்னதாக கடைசியாக அவர் தனக்குப் பிடித்த சிக்கன் பிரியாணியை அவர் ருசித்துச் சாப்பிட்டார்.


துபாயைச் சேர்ந்த குலாம் அப்பாஸ் என்ற இளைஞருக்கு வயிற்றில் புற்று நோய் இருந்தது. 

இதற்காக நீண்ட காலமாக மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வந்தார். 

ஒரு கட்டத்தில், 'வயிற்றை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதே சிறந்தது ' என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர். 

குலாம் அப்பாஸ் அதற்கு ஒப்புக் கொண்டார். வயிறு அகற்றப்படுவதற்கு முன், அவருக்கு கடைசியாக தனக்குப் பிடித்த 

சிக்கன் பிரியாணி சாப்பிட அனுமதிக்க வேண்டு மென்று மருத்துவர்களிடம் குலாம் அப்பாஸ் வேண்டினார். 

மருத்துவர்களும் அதற்கு அனுமதி அளித்தனர். குலாம் அப்பாஸின் மனைவி கணவருக்கு ருசி மிகுந்த சிக்கன் பிரியாணி சமைத்தார். 

மனைவி சமைத்துக் கொண்டுவந்த பிரியாணியைக் கடைசியாக அவர் வயிறு முட்ட ருசித்துச் சாப்பிட்டார்.

துபாயில் உள்ள ரஷித் மருத்துவ மனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் அப்பாஸின் வயிற்றில் பெரிய கட்டி உருவாகி யுள்ளது. 

அந்தக் கட்டி கிட்டத்தட்ட அவரின் வயிற்றையே அடைத்து விட்டது. இதனால், வயிற்றை முற்றிலும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

சமீபத்தில் அவரின் எடை வெகு வேகமாக குறைந்துள்ளது. இதையடுத்து, மருத்துவ மனையில் பரிசோதித்த போது புற்றுநோய் முற்றியிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அப்பாஸ் கூறுகையில், ``எனக்கு இரு குழந்தைகள். நான் இல்லாமல் அவர்கள் மிகவும் கஷ்டப் படுவார்கள். 

என் குழந்தைகள் அடையும் உயரத்தைப் பார்க்க நான் உயிரோடு இருக்க வேண்டும். 


அவர்களுக் காகவே நான் இத்தகைய கடினமாக முடிவை எடுத்தேன்'' என்று சொல்கிறார்.

வயிற்றில் இரைப்பை போன்ற வற்றை அகற்றும் அறுவை சிகிச்சைகள் ஏராளமாக நடந்துள்ளன. 

ஆனால், ஒட்டு மொத்த வயிற்றையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது எங்கள் மருத்துவ மனையில் 

இது தான் முதன் முறை'' என்று லேப்ரோஸ்கோபி நிபுணர் டாக்டர். அலி கம்மாஸ் தெரிவித்துள்ளார்..

வயிறு அகற்றப்பட்ட பிறகு அப்பாஸ் எதிர் கொள்ளப் போகும் வாழ்க்கை கடினமாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

பெரும்பாலும் திரவ உணவு தான் எடுக்க வேண்டியது இருக்கும் என்று கூறப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings